Sunday, July 13, 2008

உரைநடை

நடந்து வந்தாள்
கையில் பூவை சுழற்றியபடி
சுழன்றது என் மனதும்.

போதி மரத்தடியில்
புத்தனுக்கு ஞானம் வளர்ந்ததாம்.
இருந்து விட்டுப்போகட்டும்.
எனக்கு தெரிந்ததெல்லாம்
விழுது பரப்பிய ஓர் ஆலமரத்தடியில்
எங்கள் காதல் வளர்ந்தது.

நாம் பேசுவது வீட்டுக்கு தெரிந்தால்..
அவளுக்கு கை நடுங்கியது.
ஆண்பிள்ளையல்லவா நான்.
கை நடுங்கவில்லை எனக்கு,
மனம் நடுங்கியது.


2 comments:

Jayakumar said...

நாம் பேசுவது வீட்டுக்கு தெரிந்தால்..
அவளுக்கு கை நடுங்கியது.
ஆண்பிள்ளையல்லவா நான்.
கை நடுங்கவில்லை எனக்கு,
மனம் நடுங்கியது.
:-)

கவிதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதவும்

Unknown said...

செழியன்,
கவிதை ரொம்ப நல்லா இருக்கு !!! தொடர்ந்து எழுதுங்க !!!
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ!!!!

ராதாகிருஷ்ணன்.ரா
18/7/08